பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு (Video)
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.
வவுனியா
வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் இன்றய தினம் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது போராட்டத்தை மேற்கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நீண்டகாலமாக 107 வீத சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்து வருகின்றோம்.
அந்தவகையில் அரசாங்கம் கல்விசாரா ஊழியர்களின் சம்பள
முரண்பாட்டை உடனடியாக தீர்ப்பதுடன், முன்னமே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் 107 வீத அதிகரிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்களுக்கு தீர்வை வழங்கு, 107 வீத சம்பள அதிகரிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்து சம்பள முரண்பாட்டை தீர்க்கும் குழுவின் அறிக்கையினை உடனடியாக நடைமுறைப்படுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
ஆசிரியர் - பாலநாதன் சதீஸ்
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக வளாகங்களுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் குழுவின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்து போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை தங்கியிருந்தனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவும் மட்டக்களப்பில் உள்ள சௌக்கிய விஞ்ஞான பீடத்திற்கு முன்பாகவும் கல்லடி, நாவற்குடா சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு முன்பாகவும் இந்த அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் - கிருஷ்ண குமார்





253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
