வீழ்ச்சியை நோக்கி செல்லும் பல்கலைக்கழக கட்டமைப்பு : பேராசிரியர் வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
பல்கலைக்கழக கட்டமைப்பு பெரும் வீழ்ச்சியை நோக்கி செல்வதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பிரிகித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று(30.09.2025) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள்
சம்பள முரண்பாடுகள், விரிவுரையாளர்கள் பற்றாக்குறை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்,
தொடர்ந்துரையாற்றிய அவர், 2015 ஆம் ஆண்டு 80,000 மாணவர்களுடன் இருந்த உட்கட்டமைப்புகளுடனே இன்று 150,000 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
விரிவுரை மண்டபங்களுக்கான பற்றாக்குறை மற்றும் ஆய்வு கூடங்கள்,மாணவர்களுக்கான விடுதிகள், சிற்றுண்டிச்சாலை பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுடனே பட்டப் படிப்பை முன்னெடுக்கிறோம்.
அத்தோடு 2025ஆம் ஆண்டில் மேற்கொண்ட சம்பள முரண்பாடுகள் பரிசீலனையின் போது விரிவுரையாளர்களின் சம்பளத் தரம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் பல்கலைக்கழங்களில் விரிவுரையாளர்களை நிறுத்திக் கொள்ளவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு புதிய விரிவுரையாளர்களை சேர்த்துக் முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



