ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினைகளுக்கு ஆதரவு வெளியிட்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
நாவலவில் அமைந்துள்ள திறந்த பல்கலைக்கழகத்திற்கு எதிரில் இன்று பிற்பகல் குறித்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக சமூகம் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிபந்தனை அற்ற அடிப்படையில் அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினைக்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் குதிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 9ஆம் திகதி தேசிய போராட்ட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படாவிட்டால் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.