தடுப்பூசி பயனாளி நாடுகளில் இலங்கை உள்ளடக்கப்படுமா? அமெரிக்காவின் அறிவிப்பு
தமது நாட்டின் கோவிட் தடுப்பூசி பயனாளி நாடுகளில் இலங்கையும் உள்ளடக்ககப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் நான்சி வொன்ஹார்ன் இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.
2021, ஜூன் மாத இறுதிக்குள் அமெரிக்காவுக்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் சுமார் 13 சதவீதத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்க அரசாங்கம் விரும்புகிறது. இந்த தடுப்பூசிகள் சமமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய கோவக்ஸ் மற்றும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொது சுகாதார தரவுகளைப் பின்பற்றப்படும். இந்த நிலையில் எந்த நாடுகள்; தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் என்பது தொடர்பில் என்பது விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் நான்சி வொன்ஹார்ன் குறிப்பிட்டுள்ளார்.
2021, மே 17 அன்று, ஜனாதிபதி பைடன், சர்வதேச மற்றும் ஒருங்கிணைந்த தடுப்பூசி முயற்சியை முன்னெடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாக வான்ஹார்ன் கூறியுள்ளார்.
இதன்படி உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா 80 மில்லியன் குப்பி தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னர் ஜனாதிபதி பைடன் அறிவித்த 60 மில்லியன் குப்பி எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளும், ஜூன் மாத இறுதிக்குள் அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் குறைந்தபட்சம் 20 மில்லியன் குப்பிகளும் இதில் அடங்கும்.
அமெரிக்கா உலகிற்கு வழங்கும் தடுப்பூசிகளுடன் இந்த வழங்கல் இணைக்கப்படவில்லை
என்றும் வான்ஹார்ன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை 2-5 மில்லியன் குப்பி எஸ்ட்ராசெனெகாவைக்
வழங்கவுள்ளது என்றும், அதன்படி 600,000 குப்பிகள் எதிர்வரும் ஜூன்
மாதத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பபடுவதாக இலங்கை மாநில மருந்துக்
கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.