திடீரென பற்றிய தீ.. 275 பயணிகளுடன் திரும்பிய அமெரிக்க விமானம்
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 803, டல்லஸ் விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இயந்திரத்தில் எற்பட்ட மின்சார கோளாறு காரணமாக, ஓடுபாதையில் விமானம் செலுத்தப்பட்ட போது, தீப்பொறிகள் ஏற்பட்டதாகவும் அதனால் விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இயந்திர கோளாறு
விமான நிலைய தீயணைப்பு வீரர்களால் சரிபார்க்கப்பட்ட போது பிற்பகல் 1:30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் 15 பணியாளர்கள் இருந்ததாக யுனைடெட் விமான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் ஏற்பட்ட போது, வர்ஜீனியாவின் டேல் நகருக்கு மேலே, விமான நிலையத்திலிருந்து சுமார் 39 மைல் தொலைவில், விமான நிலையம் எரிபொருளை வெளியேற்றி, அவசரமாக தரையிறங்கியதை, தரையில் வசிக்கும் ஒருவர் காணொளி எடுத்துள்ளார்.
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam
டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் Cineulagam