தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உதவி!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா, வடகாடு பிரமணாலங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும், வவுனியா - பெரியதம்பனை ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை வவுனியா வடகாடு,பிரமணாலங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய புனருத்தாரணப் பணிக்காக ரூபா 25,000 நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
உதவிகள்
மன்னார் இரணையிலுப்பைக்குளம் சின்னவலயன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, நேரடியாக சென்று பார்வையிட்டு ரூபா 255,000 ரூபா நிதிச் செலவில் பாடசாலைக்கான பாதுகாப்பு வேலியம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ் உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு.சுஜேந்திரன், ஆசிரியர் துரை கணேசமூர்த்தி உட்பட்ட ஆச்சிரம தொண்டர்கள் சகிதம் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.








ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
