யாழ். இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
யாழ்ப்பாணத்தில்(Jaffna), வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது யாழ்ப்பாணம் - கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிர்மாய்ப்பு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு வருடங்களாக வேலை கிடைக்காத காரணத்தால் தனது வீட்டில் தவறான முடிவை எடுத்து உயிலை மாய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மேலும் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 22 மணி நேரம் முன்
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri