கட்டுநாயக்கவில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு
பாதாள உலகக் குழுத் தலைவர் "ஹீனத்யான மஹேஷின்" உதவியாளர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
“யுக்திய” நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கொலைக்கு தயாராக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒன்பது மில்லிமீட்டர் ரக 05 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொடர் விசாரணை
இந்நிலையில், தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் 'ஹீனடியன் மகேஷ்' என்பவரின் உதவியாளர் என்பதும், இரண்டு தொழிலதிபர்களை கொல்ல ஒப்பந்தம் பெற்றிருப்பதும் தெரியவந்ததுள்ளது.
மேலும், கொலைக்கு பயன்படுத்த தயாராக இருந்த ஒன்பதுமில்லிமீட்டர் ரக துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
