இலங்கையின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!
போதைப் பொருள் வர்த்தக தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கர் (Hanaa Singer) இந்த பாராட்டினை வெளியிட்டுள்ளார்.
ஶ்ரீஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் இன்றைய தினம் ஹானா சிங்கர், பாதுகாப்புச் செயலளார் கமால் குணரட்னவை (Kamal Gunaratne) சந்தித்துள்ளார்.
போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை ஒழிக்கும் இலங்கையின் முனைப்பு பிராந்திய வலயத்திற்கே ஆரோக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அண்மைய நாட்களில் இலங்கை பாதுகாப்பு தரப்பினர் சுமார் ஒரு தொன் எடையுடைய சட்டவிரோத போதைப் பொருட்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளும் காத்திரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
