விரைவில் புடினின் மரணம்! ஜெலன்ஸ்கி உறுதி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விரைவில் மரணம் அடைவார் எனவும் அத்துடன் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சி எடுத்து வருகின்றார்.
இதற்கமைய, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாரிஸ் சென்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, உலகளவில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா அவர்களுக்கு உதவப்போவது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பிரச்சினைகளும் முடியும்
மேலும், புடினின் நோக்கம் மேற்கத்திய நாடுகளுடன் நேரடியாக மோதுவது எனவும் உக்ரைனுடன் அது நின்றுவிடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது, ஐரோப்பா - அமெரிக்கா கூட்டணியை பார்த்து புடின் பயந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விரைவில் அவர் மரணித்தவுடன் அனைத்து பிரச்சினைகளும் முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You May Like This
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 16 மணி நேரம் முன்

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? News Lankasri
