உக்ரைன் ரஷ்யப் போரால் ஏற்பட்டுள்ள பேரழிவு: வெளிவரும் முக்கிய தகவல்கள்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் முடிவில்லாமல் தொடர்ந்து இடம்பெறுகின்றது.
இதனால் பல உலக நாடுகள் பெரும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றன.
இதேவேளை இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றன.
புள்ளிவிபரங்கள்
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பில் இதுவரை 13 ஆயிரம் உக்ரேனிய படையினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. இந்த தகவலை உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் உயிரிழப்பு
அவர் கூறியதாவது,மூத்த ராணுவ அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பில் கொல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்த துருப்புகளின் எண்ணிகையும் கணிசமாக உள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் அமெரிக்க ஜெனரல் மார்க் மில்லியின் கருத்துப்படி, ரஷ்யா மற்றும் உக்ரைனில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.