ஏவுகணை தாக்குதல் நடந்ததற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தல்
உக்ரைன் எல்லைக்கு அருகே அமைந்துள்ள போலத்தின் நிலப்பரப்பில் ஏவுகணை தாக்குதல் நடந்ததற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என குற்றம் சுமத்தி, அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நேற்று ரஷ்யாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன.
உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு
சபையில் உரையாற்றிய அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ்-கிரீன்பீல்ட் உக்ரைன் மீது ரஷ்யாவின் தேவையில்லாத ஆக்கிரமிப்பு மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாகவே போலந்தின் மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனை கைப்பற்ற முடியாவிட்டால் உக்ரைன் நாட்டை அடிபணிய வைக்க முயற்சிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து உரையாற்றிய ரஷ்ய தூதுவர் வசிலி நெபென்சியா உக்ரைனும், போலந்தும் ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதலைத் தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றன என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டிய கட்டாயம்
உக்ரைனின் உட்கட்டமைப்பு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தாது, உக்ரைனின் இராணுவ திறனை பலவீனப்படுத்துவதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளர் ரோஸ்மேரி டிகார்லோ தமது உரையில், போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷ்யாவின் மிகத் தீவிரமான குண்டுவீச்சு தாக்குதல்களில் ஒன்று.
இந்த தாக்கம் வரவிருக்கும் குளிர்கால மாதங்களில் மோசமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யப் போர் இல்லாதிருந்தால் அந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.