உக்ரைனில் ஏற்பட்டுள்ள இலட்சக்கணக்கான உயிரிழப்புக்கள்! பிரித்தானியா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
உக்ரைன் - ரஷ்ய போர் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டினை கடந்துள்ள நிலையில் இதுவரை 2,20,000க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் ரஷ்ய இராணுவ துருப்புகள் மற்றும் கூலிப்படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரித்தானியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சமீபத்திய அமெரிக்க மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி, பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உக்ரைனுக்கு பிரித்தானியா உதவி ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட மேற்கத்திய நாடுகள் கூடுதல் இராணுவ உதவியை வழங்க வேண்டுமென ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் உதவி
பெப்ரவரியில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்ய போர் வீரர்கள் மற்றும் அவர்களின் தனியார் கூலிப்படையை சேர்ந்த 1,75,000 முதல் 2,00,000 பேர் வரை தாக்குதலில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், அவர்களில் 40,000, முதல் 60,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்திருந்தது.
அத்துடன்,உக்ரைனிய படைகளினால் வழங்கப்பட்ட டாங்கிகளை கொண்டு நோட்டோ முறையில் அல்லது மேற்கத்திய நாடுகளின் வழியில் சண்டை பயிற்சி பெற வேண்டும் என்று பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.