திடீரென ஒலித்த ரஷ்ய எச்சரிக்கை ஒலி! 24 மணி நேரத்துக்குள் சரமாரி ஏவுகணை தாக்குதல்
உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 11 பிராந்தியங்களில் 35 கட்டடங்கள் மற்றும் மின்நிலையங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் அனுப்பப்படும் என அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அறிவித்த 24 மணி நேரத்துக்குள் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்
இந்தத் தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளதுடன்,11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரஷ்யா தாக்குதல் நடத்தும் வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலித்ததால் கீவ் பொதுமக்கள் ஏராளமானோர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யா வீசிய 55 ஏவுகணைகளில், ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்பட 47 ஏவுகணைகள் மற்றும் 24 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம் Cineulagam

வெளிநாடுகளில் வேலை செய்ய கனடா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு: ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri
