அமெரிக்க போர் டாங்கிகள் தீப்பற்றி எரியும் - உக்ரைனுக்கு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் கடந்த11 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் பல நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைனுக்கு போர் டாங்கிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்கா வழங்கும் போர் டாங்கிகள் எரிக்கப்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு ரஷ்யா எச்சரிக்கை
M1 ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று அறிவித்திருந்த நிலையில் ரஷ்யா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா உக்ரைனுக்கு ஆப்ராம்ஸ் போர் டாங்கிகள் வழங்குவது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவை பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், மற்ற ஆயுதங்களை போலவே இந்த டாங்கிகளும் எரியும் என்றும் ரஷ்ய அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் எச்சரித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 6 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
