புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் சரமாரி ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில் புத்தாண்டு பிறந்த சுமார் அரைமணி நேரத்தில், கீவ் மற்றும் பிற நகரங்களின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில், 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினம் 20 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், அவற்றில் 12 ஐ சுட்டு வீழ்த்தியுளடளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புடின்
இதேவேளை, புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, ரஷ்ய அதிபர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், உக்ரைன் மீதான போர் நடவடிக்கை கடினமானது ஆனால் தேவையான முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமைதியை ஏற்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் பொய் சொல்லி வருவதாக குற்றம்சாட்டிய புடின், உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷ்யா துண்டாக்க முயற்சிகள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.