உக்ரெய்னின் இரண்டாவது பெரிய நகருக்குள் ரஸ்ய படையினர்!
ரஸ்ய படையினர் உக்ரெய்னின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியில் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரெய்ன் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கார்கிவ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஒலேக் சினேகுபோவ் வழங்கியுள்ள தகவலின்படி, ரஸ்யாவின் இலகு இராணுவ வாகனங்கள், நகருக்குள் பிரவேசித்துள்ளன.
இந்தநிலையில் நகர குடிமக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று ஒலேக் சினேகுபோவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரெய்ன் படையினர், எதிரிகளை விரட்டியடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளமையால், பொதுமக்கள் வீதிகளுக்கு வரவேண்டாம் என்று அவர் கேட்டுள்ளார்.
இதேவேளை கார்கிவ் பிரதேசத்தில் 9 மாடிக்குடியிருப்பு ஒன்று ரஸ்ய படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
#Харків: ворог підступно атакує житлові квартали, снаряд влучив у 9-типоверхівку, загинула жінка, рятувальники?? евакуювали 2 десятки людей.https://t.co/qDwS7IAxlP pic.twitter.com/0F1IjFLwMH
— DSNS.GOV.UA (@SESU_UA) February 27, 2022