ஹோர்முஸ் நீரிணையில் பிரித்தானியாவின் பாரிய கப்பல் மீது தாக்குதல்
இன்று (27) ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்று கொண்டிருந்த பிரித்தானியாவுக்கு சொந்தமான எரிபொருள் தாங்கி கப்பல் மீது அடையாளம் தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் தாங்கி கப்பல்
பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO), இந்தத் தாக்குதலில் கப்பலுக்குச் சில சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் கப்பலில் இருந்த அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாகவும் காயமின்றியும் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் எரிபொருள் கப்பல் மீது இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க அதிகாரிகள் நேற்று (26) ஈரானில் உள்ள சில இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.
நீதியமைச்சர் பதவியை வைத்து விஜேதாச ராஜபக்ச செய்த அநியாயங்கள் - பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் உடலம்..! நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள முதலமைச்சர் விஜய்