இலக்கை மீறிய எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோரை வெளியேற்றிய பிரித்தானியா அரசாங்கம்
பிரித்தானியாவில் (UK) இருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமான எண்ணிக்கையில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை அந்நாட்டு அரசாங்கம் வெளியேற்றியுள்ளது.
2018ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சட்ட விரோத புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் தற்போதைய அளவே அதிகம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
லேபர் அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்ற 6 மாதங்களில் சுமார் 16,400 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாக பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் நடவடிக்கைகள்
இது முந்தைய ஆண்டுகளில் இருந்த எண்ணிக்கையில் 24 சதவீதம் அதிகமாகும்.
அதேநேரம், 2,580 வெளிநாட்டுக் குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதால், பிரித்தானிய தெருக்கள் பாதுகாப்பானவையாக மாறியுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
800இற்கும் அதிகமான பயங்கர குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு, சுமார் 4 விமானங்கள் பல்வேறு உலக நாடுகளுக்குச் சென்று அவர்களை அந்தந்த நாடுகளில் இறக்கி விட்டுத் திரும்பியுள்ளன.
அத்துடன், பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைக் கடத்த உதவும் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வரும் முயற்சியில் உள்ளோருக்கு பிரதமர் ஸ்டார்மர், இந்த ஆட்கடத்தல் கும்பல்களை நம்பி உங்கள் பணத்தை வீணாக்குகிறீர்கள், நீங்கள் உடனடியாக உங்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுவீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |