அமெரிக்கா - ஈரான் பதற்றத்தை தணிக்க இங்கிலாந்து மற்றும் ஓமன் தலைவர்கள் வலியுறுத்தல்
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் ஆகியோர், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழலைத் தணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதித்த இரு தலைவர்களும், இரு நாடுகளும் மோதல்களைத் தவிர்த்து சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
போர்நிறுத்தம்
தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்தம் தொடர வேண்டியது மிகவும் அவசியம் என்றும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நிலைமையை மேலும் மோசமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவர்கள் ஒருமனதாக தெரிவித்தனர்.

சமீபத்தில் வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் ஸ்டார்மர், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய சர்வதேச நாடுகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இத்தகவலை இங்கிலாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் சோஃபி கிளேர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam