உத்திக்க பிரேமரட்னவின் பதவி வெற்றிடத்திற்கு முத்துகுமாரன
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்ன இன்றைய தினம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இந்த பதவி வெற்றிடத்திற்கு எஸ்.சீ முத்துகுமாரன நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உத்திக்க தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
உத்திக்கவின் பதவி விலகல் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் குசானி ரோஹானதீர தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவித்துள்ளார்.
வேட்பாளர் பட்டியல்
இதன்படி வேட்பாளர் பட்டியலில் உத்திக்கவிற்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்த முத்துகுமாரன நாடாளுமன்ற ஊறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் ஆணைக்குழு இந்த பெயரை அங்கீகரித்ததன் பின்னர் முத்துகுமாரன பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |