மக்கள் ஆணைக்கு முரணான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரபல நபர்! - கம்மன்பில
அரசாங்கம் மக்களின் ஆணைக்கு புறம்பாக செயற்பட்டால், அரசாங்கத்திற்குள் எதிர்க்கட்சியாக தானும் அமைச்சர் விமல் வீரவங்சவும் செயற்படுவோம் என்று வழங்கிய வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி வருவதாக அமைச்சர் உதய கம்மன்பில் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இது ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரானதோ, ராஜபக்ச குடும்பத்தை பிரிக்க செய்யும் நடவடிக்கையோ அல்ல.
வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்று என்ற போராட்ட கோஷத்தின் அடிப்படையில் இருந்து அரசாங்கத்தை சரியாக வழிக்கு கொண்டு வரும் போராட்டம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்குள் இருக்கும் தீயை வெளியில் வழங்கக்கூடாது என நம்புகிறேன்.
அரசாங்கத்திற்குள் இருக்கும் ஒரு பிரபலமான நபர் மக்கள் ஆணைக்கு முரணான தீர்மானங்களை எடுத்து வருகிறார்.
நானும் அமைச்சர் வீரவங்ச உள்ளிட்டோர் அதற்கு எதிராக அரசாங்கத்திற்குள் போராட்டம் நடத்தி வருகின்றோம் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.