உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: லால்காந்த
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினரும், கண்டி மாவட்ட தலைமை வேட்பாளருமான கே.டி. லால்காந்த கோரியுள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை உதய கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்க நடவடிக்கை
அவர்கள் சத்தம் போட்டாலும் போடாவிட்டாலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள் மற்றும் மத அமைப்புக்கள் இந்த விடயம் தொடர்பில் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri