செம்மணி அவலத்தை திசை திருப்ப புதிய கதை கூறும் கம்மன்பில
யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும் எனவும் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது எனவும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு யுத்தம் நடந்த மண். இந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பலர் மண்ணுக்குள்தான் புதைக்கப்பட்டார்கள்.
இன வன்முறை
எனவே, அந்தப் புதைகுழிகள் யுத்தத்தின் பின்னர் வெளிக்கிளம்பும்போது பலரும் வெவ்வேறு விதமாகக் கருத்து வெளியிட்டு வருகின்றனர். செம்மணியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைப் பெருமளவு நிதிகளை வீண்விரயம் செய்து அரசு அகழ்கின்றது.
இது தேவையற்றது. அந்தப் புதைகுழிக்குள் இருந்து எலும்புக்கூடுகளாக மீட்கப்படுபவர்கள் உண்மையில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது.
ஏனெனில் யுத்தத்தில் மூன்று இனத்தவர்களும் உயிரிழந்தனர். எனவே, செம்மணி மனிதப் புதைகுழியைத் தோண்டுவது மீண்டும் இன வன்முறைக்கே வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
