கோட்டாபய - மகிந்த முன்னிலையில் கம்மன்பில வெளியிடவுள்ள இரகசியம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அம்பலப்படுத்தும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பில் இன்று 31ஆம் திகதி வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருக்கும் அனைவரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூத்திரதாரியைத் தேடி எனும் ஆய்வு
சுமார் ஒன்றரை வருட காலம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி' எனும் ஆய்வு நூலைத் தாம் தயாரித்துள்ளதாக உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.
அதனை இன்று மாலை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த 7 வருடங்களாக விற்பனை செய்யப்பட்டது. இதை வைத்து அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன, கலைக்கப்பட்டன.
எந்தவொரு அடிப்படையும் இன்றி இராணுவத்தினரை துன்புறுத்த இந்தத் தாக்குதல் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri