"சுமந்திரனின் பெயரை நிராகரித்த விடுதலைப் புலிகளின் தலைவர்" (Video)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் சுமந்திரனின் பெயர் நிராகரிக்கப்பட்டிருந்ததாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அன்றைய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் சுமந்திரனின் பெயர் நிராகரிக்கப்பட்டிருந்தது.
அதாவது சம்பந்தன் கொடுத்த பெயர் பட்டியலில் சுமந்திரனும் இடம்பெற்றிருந்தார், அப்போது அவரது பெயர் நிராகரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அத்தகைய மனிதர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக உரிமையை பெற்றுக் கொண்டு இப்போது ஆயுதக் குழுக்கள் இங்கே இல்லை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இல்லை, கொலையாளிகள் இங்கே இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசியல் தலைவர்களின் தவறுகள் தான் மிக முக்கியமானது. இந்த ஆயுதக்குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட சண்டைகளில் இடம்பெற்ற கொலைகள் ஒன்று இரண்டாகவோ அல்லது நூறு, ஆயிரமாகவோ காணப்படலாம்.
ஆனால் இவர்கள் இணைந்து கொண்டு ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழிக்கும் வேலைகளை செய்கிறார்கள் என கூறியுள்ளார்.
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri