தீவகத்தை உலுக்கும் கொலைகள்! வெளியேறும் மக்கள்:மறைந்துள்ள உண்மைகள்(Video)
தீவகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்னும் போது அங்குள்ள மக்கள் தீவகத்தை விட்டு வெளியேறவே நினைப்பார்கள் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,“யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் அதிகமான இராணுவம் நிலை கொண்டிருக்கின்ற ஒரு இடமாகவே உள்ளது.அந்த யாழ் குடாவின் தீவக பகுதிக்கு, சென்று வருபவர்கள் கூட பதிவு செய்ய வேண்டும் என்ற அளவிற்கு கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.
இவ்வாறு அன்று தொடக்கம் தீவக பகுதியை படையினர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அங்கு இடம்பெறும் கொலை, கொள்ளை போன்ற செயல்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் எதாவது ஒரு நடவடிக்கையில் உள்வாங்கப்பட்டிருப்பார்கள்.
அதாவது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களாக இருப்பார்கள் அல்லது துணை இராணுவ குழுவினருடன் இணைந்து இயங்குவார்கள்.
மேலும் தமிழ் மக்கள் மெல்ல மெல்ல அந்த இடங்களை விட்டு வெளியேறி கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தீவகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்னும் போது அங்குள்ள மக்கள் தீவகத்தை விட்டு முழுமையாக வெளியேறும் நிலை ஏற்படும்.”என தெரிவித்துள்ளார்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 19 மணி நேரம் முன்

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
