கடுமையான நிலைப்பாட்டில் இலங்கை அரசு! முடிவை மாற்றிய அமெரிக்கா (Video)
இலங்கை அரசாங்கம் அது யாருடைய அரசாங்கமாக இருந்தாலும் தமிழர்கள் தொடர்பான விடயத்தில் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள் என்பதை அமெரிக்கா அறிந்துள்ளதாக இலங்கையில் இருக்கும் மூத்த பத்திரிகையாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் அது யாருடைய அரசாங்கமாக இருந்தாலும் தமிழர்கள் தொடர்பான விடயத்தில் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள்.
அதன்காரணமாக அமெரிக்க இந்திய அரசுகள் பார்க்கின்றன இலங்கையை நாங்கள் சமாளிக்க வேண்டும். தமிழரை பிடிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கட்சிகளை இலகுவாக மடக்கும் அனுபவங்களை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் மனநிலையில் இந்த தமிழ் கட்சிகள் கொண்டிருக்கின்றன. ஆகவே இவர்களை நாங்கள் சமாளித்து இவர்களுக்கு ஆலோசணை கூறி
இலங்கையின் ஒற்றையாட்சி யாப்புக்குள்ளே வாழுங்கள் என்ற அறிவுறுத்தலை கொடுத்து
அதற்கேற்ப இப்போது கொண்டு வந்து விட்டுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
