'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான்! இந்தியாவுடன் அடுத்த மோதல்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நேற்றையதினம்(17) பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது.
பாகிஸ்தான் அணி
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில், ஜுனைத் சித்திக் 3 விக்கெட்டுகளையும், சிம்ரன்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதனைதொடர்ந்து 147 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி களமிறங்கியது.
17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி
எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, அப்ரார் அகமது மற்றும் ஹாரிஸ் ரௌஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன்மூலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
