இலங்கை மக்களுக்கு இரங்கல் வெளியிட்ட ஐக்கிய அரபு இராச்சியம்
இலங்கை மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் இரங்கல் வெளியிட்டுள்ளது.
கடுகண்ணாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இரங்கல் வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று இந்த மண் சரிவு அனர்த்தத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாக ஐக்கிய அரபு இராச்சிய வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த துயர சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு மற்றும் இலங்கை மக்களுக்கு ஆறுதல்களை வெளிப்படுத்துவதாக ஐக்கிய அரபு இராச்சிய வெளிவகார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சீரற்ற கால நிலை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri