ஈரான் கப்பல் தொடர்பான இலங்கையின் தீர்மானம் : உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவித்தது அமெரிக்கா
இலங்கையின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்க அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் கப்பல் மற்றும் அதில் இருந்த கடற்படையினரைச் சுற்றியுள்ள நிலைமையைப் பற்றி இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கமே என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் இறையாண்மையை ஐக்கிய அமெரிக்கா முழுமையாக அங்கீகரித்து அதனை மதிப்பதாகவும் அந்தத் துறை வலியுறுத்தியுள்ளது.
தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள்
ஐரிஸ் புஷர் கப்பல் மற்றும் அதில் பணியாற்றிய குழுவினரைப் பற்றிய நிலைமையிலும், கடலில் மீட்கப்பட்ட ஈரான் கடற்படை வீரர்களை பற்றியும் இறுதி முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்கே இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அந்தத் தீர்மானம் இலங்கையின் உள்ளூர் சட்டங்களுக்கும் சர்வதேச சட்டப் பொறுப்புகளுக்கும் ஏற்ப எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இலங்கை இடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கம், ஈரான் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை குறைப்பதே என அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகில் மூழ்கிய ஈரானிய கடற்படை கப்பல் -அமெரிக்காவால் இலங்கைக்கு எச்சரிக்கை - அடுத்து நடக்கபோவது என்ன..!
மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாக போகும் ஹிந்தி டப்பிங் சீரியல்கள்... எந்த டிவி தெரியுமா? Cineulagam
அவ்ளோ ஒர்த் கிடையாது, அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. மனைவி சங்கீதா சர்ச்சை பற்றி பேசிய விஜய் Cineulagam