நாடு திரும்பிய அமெரிக்க க்ரூசர் ஏவுகணை கப்பல்
USS Gettysburg (CG-64) திங்கட்கிழமை (23.03.2026) ஐந்து மாதங்கள் அமெரிக்க தெற்கு கட்டளை (U.S. Southern Command) பகுதியில் பணியாற்றிய பின்னர் வெர்ஜீனியாவில் உள்ள Naval Station Norfolk- கப்பல் தளத்தை வந்தடைந்துள்ளது.
Ticonderoga வகை வழிகாட்டி க்ரூசர் ஏவுகணைகளுடன் அக்டோபரில் Norfolk இல் இருந்து புறப்பட்டு 2025 அக்டோபர் 31ஆம் திகதி முதல் கரீபியன் கடலில் செயல்படத் தொடங்கியது.
வெனிசுவேலா தாக்குதலிலும் ஈடுபட்டது
அமெரிக்க தெற்கு கட்டளையின் கீழ் (Gettysburg, “Operation Southern Spear” எனப்படும் நடவடிக்கைக்கு ஆதரவாக SOUTHCOM-க்கு அனுப்பப்பட்ட போர் கப்பல்களில் ஒன்றாகும்.
இதன் செயற்பாடுகள் அமெரிக்காவுக்கு வரும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைக் குறைப்பதற்கான ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் செயற்றிட்டமாகும்.

Gettysburg வெனிசுவேலா ஜனாதிபதி Nicolás Maduro மற்றும் அவரது மனைவி கைது செய்ய அமெரிக்கா நடத்திய நடவடிக்கையின் போது கரீபியன் பகுதியில் இருந்தது.
மேலும் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் படகுகளுக்கு எதிரான தாக்குதல்களிலும் இது ஈடுபட்டது.


ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri