ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது!
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் போது, சுமார் மூன்று வருடங்களுக்கு முன், ஐக்கிய நாடுகளுக்கான நிறுவனத்தின் மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்தது.
அத்துடன், மனித உரிமை ஆணைக்குழு பாகுபாட்டுடன் இயங்குவதாக அமெரிக்கா குற்றம்சுமத்தியது.
இந்நிலையில், தற்போது மனித உரிமை ஆணைக்குழு 18 உறுப்பு நாடுகளை புதியதாக தெரிவு செய்துள்ளது. இதில் அமெரிக்காவும் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த 18 நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri