பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை (VIDEO)
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் மன்னார் மாவட்டத்தில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் - பள்ளிமுனை பகுதியை சேர்ந்த ஒருவரும், தள்ளாடி இராணுவ முகாமின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருமாக இருவர் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது தனது உடமையில் பீரங்கிக்கு பயன்படுத்தும் திரியை வைத்திருந்தார் என்ற அடிப்படையில் பள்ளிமுனையை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருக்கு பீரங்கி திரியை வழங்கிய குற்றச்சாட்டில் தள்ளாடி இராணுவ முகாமை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும், கடந்த 2019 ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை
இந்நிலையில், இருவரையும் விடுவிக்குமாறு பொலிஸார் ஊடாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரி சட்டத்தரணி எஸ்.டினேசன் கடந்த இரண்டு வருடங்களாக சமர்ப்பனங்கள் மேற்கொண்டு வந்த நிலையில்,நீண்ட காலமாக அவர்களுக்கு பிணை நிராகரிக்கப்பட்டு இருந்ததுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெற்று அவர்களை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சட்டத்தரணி எஸ்.டினேசன் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பல முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்ததோடு நேரடியாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆலோசனை கோரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பான விபரங்களை பரிசீலித்த சட்டமா அதிபர் திணைக்களம் இருவரையும் விடுவிப்பதற்கான கடிதத்தை மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு நேற்றைய தினம்(4) வியாழக்கிழமை அனுப்பி வைத்திருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(5) குறித்த வழக்கு மன்னார் நீதவான்
நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இருவரையும்
வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
