கேரள கஞ்சாவுடனும் பொலிஸ் அதிகாரி இருவர் கைது
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் பொலிஸார் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 6 கிலோ 542 கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொலிஸார் குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, பேலியகொடை அதிவேக நெடுஞ்சாலையில் காவலரணில் கடமையாற்றிவந்த பொலிஸ் அதிகாரி ஒருவருவம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிலோ 191 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri