அம்பாறையில் கசிப்புடன் இருவர் கைது
அம்பாறை (Ampara) - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த அதிகளவான கசிப்பு கலன்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (13) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில், 45 மற்றும் 69 வயதுடைய சந்தேகநபர்களே சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 23000 மில்லி லீட்டர்கள் கசிப்பு கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கைதான 2 சந்தேக நபர்களும் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் 69 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 17 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
