வெளிநாட்டு குற்றக்கும்பலுடன் தொடர்பிலிருந்த இருவர் அதிரடிப்படையினரால் கைது
திட்டமிட்ட குற்றக்கும்பலை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுக்க மற்றும் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 மற்றும் 37 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்வெல்ல பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது அடையாளம் உறுதிப்படுத்த முடியாத 02 மோட்டார் சைக்கிள்கள், மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அதுரிகிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
