பதுளையில் இரு சிறுமிகள் துஷ்பிரயோகம்! - தந்தை கைது
பதுளை – தெமோதர பகுதியில் 12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சிறுமிகளின் தந்தையான 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிகள் திடீர் சுகயீனமடைந்ததை அடுத்து, இருவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, இருவரும் கர்ப்பம் தரித்துள்ளமை வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுமிகள் தொடர்ந்தும் பதுளை வைத்தியசாலையில் சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri