காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் வர்த்தகர்கள் இருவர் கைது
காத்தான்குடியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு வர்த்தகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.01.2026) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட வர்த்தகர்கள் இருவரும், போதைப்பொருட்களை கொழும்பில் இருந்து எடுத்துச்சென்று, கல்லடியில் உள்ள விடுதியொன்றில் வைத்து விற்பனை செய்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கல்லடியிலிருந்து சம்மாந்துறைக்கு போதைப்பொருட்களை எடுத்துச்சென்ற பொழுதே குறித்த வர்த்தகர்களை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
போதைப்பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 26 மற்றும் 29 வயதுடைய இரண்டு வர்த்தகர்களும் வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam