சென்னையில் சிறுவன் உட்பட்ட இருவர் மீது தாக்குதல்: பாடகர் மனோவின் மகன்மார் ஆந்திராவுக்கு தப்பி ஓட்டம்
16 வயது சிறுவன் உட்பட்ட இரண்டு பேர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்படும் தென்னிந்திய பாடகர் மனோவின் மகன்மார் இருவரும் ஆந்திராவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை, ஆந்திராவுக்கு விரைந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
சென்னை, ஆலப்பாக்கம் அருகே கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த சிறுவனும் மற்றுமொருவருமே மனோவின் மகன்மார் உட்பட்ட ஐந்து பேரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் குறித்து மனோவின் மகன்களுக்கு எதிரான காணொளியும் ஆதாரமாக கிடைத்துள்ளது.
இந்தநிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் பாடகர் மனோவின் மகன்மாரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனைய மூவரை தேடும் பணியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri