2400 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது(Photos)
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை பகுதியில் வைத்து 2400 கிலோ எடையுடைய மஞ்சள் பொதிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தமிழகத்திலிருந்து 2400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு
விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற நடவடிக்கை
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் பட்டா ரக வாகனத்தில் மஞ்சளை கடத்திச் சென்றவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களுடன் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
