சொகுசுக் காரில் சட்டவிரோத மதுபானம் கடத்தல்! இருவர் கைது
வென்னப்புவையில் இருந்து பாணந்துறை வரை சொகுசுக் கார் ஒன்றில் சட்டவிரோத மதுபானம் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாடகைக்கு பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து பாணந்துறை பகுதிக்கு சட்டவிரோத மதுபானம் கடத்தப்படுவதாக மேல் மாகாண குற்றத் தடுப்புபிரிவுக்கு இரகசியத்தகவல் கிடைத்திருந்தது.
பொலிஸாரால் கைப்பற்றல்
அதனடிப்படையில் ஹொரணை அருகே கிந்தெல்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்டபோது, அதன் பின்பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு சட்டவிரோத மதுபானப் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் 8 பைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அதன் சந்தைப் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபாய் என்று கூறப்படுகின்றது.
அதனையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.