சட்டவிரோதமாக காட்டு விலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது
சட்டவிரோதமாக காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆராச்சிக்கட்டுவ - வில்பொத்த பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (13.2.2024) மாலை முன்னெடுக்கப்பட்டது.
இந்த கைது நடவடிக்கையில் இரண்டு குளிரூட்டிப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த காட்டுப்பன்றி இறைச்சி, மான் இறைச்சி மற்றும் எறும்புத்திண்ணி இறைச்சி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
சந்தேக நபர்கள்
இந்நிலையில், 103 கிலோ கிராம் காட்டுப்பன்றி இறைச்சி, 17 கிலோ கிராம் மான் இறைச்சி மற்றும் 7 கிலோ கிராம் எறும்புத்திண்ணி இறைச்சி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த விடுதிக்கு மது அருந்துவதற்கு வருகை தருபவர்களுக்கு ஒரு தட்டு இறைச்சி 2500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |