கந்தளாயில் மான்களை வேட்டையாடிய இருவர் கைது
கந்தளாய் - சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பொறி வைத்து மான்களை வேட்டையாடிய இரு நபர்களை சூரியபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வேட்டையாடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு மான்களுடன் சந்தேகநபர்கள் பிடிபட்டுள்ளனர்.
இறந்த நிலையில் காணப்பட்ட மான்
கைது செய்யும் போது, இரண்டு மான்களும் இறந்த நிலையில் இருந்துள்ளதுடன், அவற்றை எடுத்துச் செல்லத் தயாரான நிலையில் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேட்டையாடப்பட்ட இரண்டு மான்களும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பொறியும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள சந்தேகநபர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கந்தளாய் சூரியபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், அவர்கள் இன்றைய தினம் (05.01.2026) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri