நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர்
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று (19.02.2025) மதியம், இலங்கை பொலிஸாரின் தகவலின் பேரில் சர்வதேச பாதுகாப்பு தரப்பால் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நாட்டில் பல குற்றங்களில் ஈடுபட்ட குறித்த இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு
அவர்களில் முதன்மையானவர் ரவிது சந்தீப குணசேகர என்றும், இவர் குற்றப் புலனாய்வுத் துறையில் பணிபுரிந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இவர் நடுன் சிந்தக அல்லது ஹரக் கட்டா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியை நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக நம்பப்படுகிறது.
அவர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு நபர் நீர்கொழும்பை சேர்ந்த அமில சந்திரானந்தா என்றம் கூறப்படுகிறது.
இவர் மீது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பல கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
