மட்டு நாசிவன்தீவு கடலில் நீரிழ் மூழ்கிய 7 வயதான இரு சிறுவர்கள் மீட்பு
மட்டக்களப்பு - நாசிவன்தீவு கடலில் நீராடிய 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள காவத்துமுனை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் உறவினர்கள் உள்ளிட்டோர் நேற்று மாலை நாசிவன் தீவு கடற்கரை பகுதிக்கு சென்று கடலில் நீராடிக் கொண்டிருந்தனர்.
இதன்போது 7 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஆகிய இரு சிறுவர்களும் கடல் நீரில் மூழ்கியதையடுத்து நீராடிக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி மட்டு. போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
குறித்த பெற்றோர் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாமையினால் இந்து அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதையடுத்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
