வரலாற்றில் முதற்தடவையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 1,600 கோடி பெறுமதியான அன்பளிப்பு

Sri Lanka Narendra Modi India
By Dharu Jan 15, 2024 04:25 AM GMT
Report

வரலாற்றில் முதற்தடவையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து எஞ்ஜின்களை, இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

ஒரு தொடருந்து எஞ்ஜின் பெறுமதி 800 மில்லியன் ரூபாவென தெரிவித்த அமைச்சர், சுதந்திரத்தின் பின்னர் இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ இவ்வாறான பாரிய அன்பளிப்பு வரலாற்றில் முதல் தடவையாக கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

65 பேர் கொண்ட குழு

20 தொடருந்து எஞ்ஜின்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடத்தி , எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அந்தவகையில், தமது வேண்டுகோளுக்கு கவனம் செலுத்தியமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கையிலிருந்த முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கும், தாம் நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதற்தடவையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 1,600 கோடி பெறுமதியான அன்பளிப்பு | Twenty Locomotives India Is A Gift

அதேவேளை, இலவசமாக வழங்கும் இரண்டு எஞ்ஜின்களை பார்வையிடுவதற்காக இலங்கையிலிருந்து 65 பேர் இந்தியாவுக்குச் சென்றதாக பொய்யான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன என்றும் ஐந்து பேர் கொண்ட குழுவே இந்தியாவிற்கு சென்றதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இதன்போது மேலும் விளக்கமளித்த அமைச்சர்,

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய பத்திரிகையொன்று இலவசமாக இந்தியா வழங்கும் எஞ்ஜின்களை பார்வையிடுவதற்காக இலங்கையிலிருந்து 65 பேர், இந்தியா சென்றதாக பொய்யான செய்தியொன்றை பிரசுரித்துள்ளது.

இது தொடர்பில் நான் கவலையடைகிறேன். நீண்டகாலமாக பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்கும் தொடருந்து சேவை, மிக மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்தது.

வெளிநாட்டுக் கடன் உதவி

இந்நிலையில் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு முடியாதநிலை காணப்பட்டது. நீண்டகாலமாக தொடருந்து திணைக்களம் நட்டமீட்டி வருவதால் அதனை மீள் முதலீடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போனது.

வரலாற்றில் முதற்தடவையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 1,600 கோடி பெறுமதியான அன்பளிப்பு | Twenty Locomotives India Is A Gift

பெரும்பாலான தொடருந்து சேவை அபிவிருத்தி நடவடிக்கைகள் வெளிநாட்டுக் கடன்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடருந்து பாதை புனரமைப்பு, தொடருந்து எஞ்ஜின்கள் கொள்வனவு மற்றும் தேவையான உதிரிப்பாகங்களையும் வெளிநாட்டுக் கடன் மூலமே பெற வேண்டியுள்ளது.

இந்நிலையில், கொழும்புத் திட்ட உதவி, கனேடிய உதவி, இந்திய கடனுதவித் திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் மூலமாகவே எமது தொடருந்து சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கான கடன்கள் பெறப்பட்டுள்ளது.” என்றார்.

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US