உண்மையான பணி தற்போதுதான் தொடங்குகிறது : விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் “மகத்தான வெற்றி” பெற்றதாக வர்ணித்த இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான ஜோசப் விஜய் சந்திரசேகருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், “உண்மையான பணி தற்போதுதான் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டதோடு, வரவிருக்கும் சவால்களைக் கடந்து மக்களுக்கு அர்த்தமுள்ள பலன்களை வழங்க விஜய்க்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்தியுள்ளார்.
இரு நாட்டு மக்கள்
இரு நாட்டு மக்களைப் பாதிக்கும் விடயங்களில், இலங்கையுடன் “வலுவான மற்றும் நேர்மறையான உறவு” ஏற்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Congratulations to Hon. C. Joseph Vijay on a resounding victory! The real work begins now, and I wish you and your team the strength and determination to overcome the challenges ahead and deliver meaningful benefits to the people.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 4, 2026
I also hope for a stronger and more positive…
மேலும், விஜய் மற்றும் அவரது குழுவினருக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் நாமல் தெரிவித்துள்ளார்.