சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய நியமனம்
சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உபுல்தெனிய இதுவரை காலமும் பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக கடயைமாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துசார உபுல்தெனிய, களனி பல்கலைக்கழகத்தில் பொருளியல் விஞ்ஞானத்துறையில் பட்டத்தையும், பேராதனை பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் குறித்த படிப்பையும், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் குற்றவியல் விஞ்ஞானம் தொடர்பில் பட்ட பின் படிப்பையும், அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமொன்றையும் பெற்று கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலைகள் தொடர்பில் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் உபுல்தெனிய பயிற்சிகளை பெற்று கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



