நாட்டை ஸ்தம்பிதம் அடையச் செய்ய முயற்சி! - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
நாட்டை ஸ்தம்பிதம் அடையச் செய்ய முயற்சிக்கப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சில பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வரும் நிலைமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போது கடைகளை மூடாதவர்கள் தற்பொழுது மூடுவதாகவும் இதன் பின்னணியில் ஓர் அரசியல் நோக்கம் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்பொழுது கடைகள் வர்த்தக நிலையங்கள் மூடப்படுவது நாட்டின் பொருளாதாரத்தை நலிவடையச் செய்யவேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றினால் நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் காலத்திற்கு காலம் அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி நினைத்த நேரத்தில் அவ்வாறு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எதிர்க்கட்சி குழப்பக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
